search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meta Keyword: Nissan India"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிசான் கிக்ஸ் காரின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Nissan #Car
    நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் நிசான் நிறுவனத்தின் டெரானோ காருக்கு மாற்றாக அமையவிருக்கிறது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் நிசான் கிக்ஸ் முன்பதிவு கட்டணம் ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.


    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய நிசான் கிக்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Nissan #Car
    ×