search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchants Association Request"

    • பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் கட்டிடங்களை அகற்ற வந்த அதிகாரிகளிடம், தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.
    • அதில் கடைகளை வைத்திருப்போர் தங்களது கோரிக்கையை முன் வைத்ததன்பேரில் கடைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள குற்றால சத்திரம் இடத்தில் கடையம் ரோடு தொடங்கி அவ்வையார் மகளிர் பள்ளி வரை சுமார் 35-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் நெல்லை- தென்காசி நான்கு வழிச் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நில ஆர்ஜிதம் செய்வதற்காக நோட்டீஸ்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் அங்கிருந்த கடைகள் மற்றும் கடைக்கு முன்பு போடப் பட்டிருந்த ஷெட்டுகளை ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்த நேற்று காலையில் நெடுஞ் சாலை துறையினர் மற்றும் சாலை ஒப்பந்ததாரர்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் பாவூர் சத்திரம் வணிகர்கள் சங்கத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களுக் கான இழப்பீடு தொகை தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக பூக்கடை மற்றும் பெட்டி கடைகளுக்கு நிவாரண தொகை வழங்கிய நிலையில் பல ஆண்டுகளாக குற்றால சத்திரம் இடத்தில் இருந்த எங்களுக்கு எந்தவித இழப்பீடு தொகை மற்றும் கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையும் வந்து சேரவில்லை எனவும், இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதால் தங்களால் இழப்பீடு மற்றும் ஊழியர்க ளுக்கான நிவாரண தொகை பெற முடியவில்லை என்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் கட்டிடங்களை அகற்ற வந்த அதிகாரிகளிடம், தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றார். அதில் கடைகளை வைத்திருப்போர் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். அதன் பேரில் கடைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஏற்கனவே பாவூர்சத்தி ரத்தில் சாலையின் வட பகுதியில் நிலம் கையகப் படுத்தும் பணி முடிவடைந்த நிலையில் தென்பகுதி யில் உள்ள இடங்களை சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுவரும் செல்வவிநாயகர்புரம் பெல் மருத்துவமனையில் இருந்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வரை பாதாள சாக்கடை, மழை வடிநீர் குழாய் அமைக்கும் பணி இன்னும் ஒரு வார காலத்தில் தொடங் கப்படும் எனவும், அதன் பின்னர் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×