search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mental Health Seminar"

    • ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.

    ராமநாதபுரம்

    சர்வதேச பெண்கள் அமைப்பான ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நேஷனல் அகாடமி பள்ளி அரங்கத்தில் சங்கத் தலைவி கவிதா செந்தில்குமார் தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.

    திட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசி னார். மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து டாக்டர் கனகப்பிரியா, மனநலம் குறித்த ஆலோ சனைகளை டாக்டர் ரம்ய பிரியா, ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வை டாக்டர் ராசிகா, பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பருவ மாற்றங்கள் குறித்து டாக்டர் ஆயிஷதுல் நஸிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் ராயல்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு ஆகிய சங்கங்களும் கலந்து கொண்டு தங்களுடைய பங்களிப்பை அளித்தனர்.

    ரோட்டரி சங்க தலைவர் பார்த்திபன், லட்சுமிவர்தினி ஆகியோர் கலந்து கொண்ட னர். மாவட்ட ஐ.எஸ்.ஓ. கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க செயலர் ஹரிதா நன்றி கூறினார்.இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2,100 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×