search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Member Attack"

    • சென்னிமலை, ஈங்கூர், பெருந்துறை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் பலர் கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
    • இதனால் ஈங்கூர் பகுதியில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் சிப்காட் செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் ஏராளமனோர் வேலை செய்து வருகிறார்கள்.

    மேலும் சென்னிமலை, ஈங்கூர், பெருந்துறை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் பலர் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இதனால் ஈங்கூர் பகுதியில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈங்கூர் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் குழாயில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈங்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற லோகநாதன். இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகர். இவர் இன்று காலை அந்த குடிநீர் குழாயில் குடத்தில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் சில பெண்கள் குடிநீர் பிடிப்பதற்காக அங்கு வந்தனர்.

    அப்போது அங்கு தண்ணீர் பிடித்து கொண்டு இருந்த லோகநாதன் குடத்தை எடுத்து விட்டு வடமாநில பெண்கள் தண்ணீர் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகநாதனுக்கும் வட மாநில பெண்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து அந்த பெண்கள் அவர்களது உறவினர்களுக்கு தகவல கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வட மாநில ஆண்கள், பெண்கள் என பலர் வந்தனர். இதை தெடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து லோகநாதன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈங்கூர்- சென்னிமலை ரோட்டில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம்கோயல் மற்றும் சென்னிமலை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் வட மாநிலத்தவர்கள் இந்த பகுதியில் கடைகள் வைத்து நடத்த அனுமதி வழங்க கூடாது அவர்கள் உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என மக்கள் கூறினர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிட்டப்பட்டது. இதனால் சென்னிமலை பழனி ரோட்டில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×