search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melavasal road"

    • உயிர்பலி வாங்க காத்திருக்கும் மதுரை மேலவாசல் சாலையை அதிகாரிகள் கவனிப்பார்களா?
    • அதிகாரிகள் இனியும் மெத்தனம் காட்டா மல் சாலை சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலை புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியார் பஸ் நிலையமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகள் நடந்தது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய வணிக வளாகம் கட்டும் பணி தற்போது வரை ஆமை வேகத்தில் நடக்கின்றன.

    பஸ் நிலைய திட்ட பணிகளின் போது மழை நீர் வடிகால் திட்டத்திற்கு போதிய அளவு முக்கியத்து வம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது‌. இதனால் நகரில் பெய்த ஒரு மழைக்கே பெரியார் பஸ் நிலையம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வடிகால் வசதி எதுவும் இல்லாததால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கும் அவல நிலை உள்ளது.

    உயிர்ப்பலி

    இதேபோல் முக்கிய சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக நகரின் மையப் பகுதியில் பெரியார் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் உள்ள மேலவாசல் சாலை மோசமாக உள்ளது. முத்து பாலத்தில் இருந்து பெரிய பஸ் நிலையத்துக்கு வரும் வாகனங்கள் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளத்தில் இறங்கி விபத்தில் அடிக்கடி சிக்கு கிறது.

    குறிப்பாக மோட்டார் சைக்கிளில் தங்களது குடும்பத்துடன் வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பதை அறியாமல் வேகமாக வருவதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது.

    மேலவாசல் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில் சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது இவை எந்நேரமும் விபத்தை ஏற்படுத்தி உயிர்பலி வாங்கும் நிலையில் உள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி முன்வரவில்லை.

    எனவே அதிகாரிகள் இனியும் மெத்தனம் காட்டா மல் சாலை சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×