search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical record"

    தேசத் தந்தை மகாத்மா காந்தி 1939-ல் 46.7 கிலோ எடை மட்டும் இருந்தார் என்றும் உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. #MahatmaGandhi
    புதுடெல்லி:

    தேசத் தந்தை மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

    அதற்கு முன் காலங்களில் அவரது உடல் நிலை எப்படி இருந்தது? என்பது பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து இப்போது வெளியாகி உள்ளது.

    இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடத்தும் மருத்துவ கமிட்டி பத்திரிகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காந்தி பற்றிய பழங்கால மருத்துவ அறிக்கையை தேடி அதை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    அதில் 1939-ல் மகாத்மா காந்தி 46.7 கிலோ எடை மட்டும் இருந்தார். அவரது உடல் 5 அடி 5 அங்குலமாக இருந்தது. உயர் ரத்த அழுத்த நோயில் அவதிப்பட்டு வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவருக்கு 1925, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் மலேரியா நோய் தாக்கி இருந்தது. சரி செய்ய முடியாத அளவிற்கு நுரையீரல் அழற்சி நோய் தாக்கி இருந்தது. மேலும் நுரையீரல், இதயத்தில் சுருக்கம், ஆங்காங்கே குழிகள் தோன்றி இருந்தன.

    காந்தி தினமும் அதிக தூரம் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு 185 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்வார். இவர் 1913-ல் இருந்து 1948-ல் கடைசி வரை 79 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பூமியை 2 தடவை சுற்றி வரும் தூரமாகும்.

    காந்திக்கு 1937 மற்றும் 1940 ஆகிய நாட்களில் இ.சி.ஜி. பரிசோதனை நடத்திய இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.

    அவருக்கு இயற்கை மருத்துவம் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனவே இயற்கை மருத்துவ முறைகளை அதிகம் சாப்பிட்டார். அது மட்டுமல்ல தனது உடலையே இயற்கை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொண்டார்.

    மனதை நன்றாக வைத்திருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

    மகாத்மா காந்தி தொடர்பான பல்வேறு மருத்துவ ஆவணங்கள் மூலம் இந்த தகவல்களை திரட்டியதாக இந்த மருத்துவ கவுன்சில் டைரக்டர் பல்ராம் பாகவா தெரிவித்தார்.  #MahatmaGandhi
    ×