search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical insurance card"

    • நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
    • இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

    திருப்பூர் :

    சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொட ரில் கைத்தறி, துணிநூல் துறை மானிய கோரிக்கை யில் அமைச்சர் காந்தி, புதிய திட்டங்களை அறி வித்துள்ளார்.

    இதுகுறித்து கோவை, திருப்பூர், மாவட்டநெச வாளர் கூட்டுறவு சங்கங்க ளின் சம்மேளன தலைவர் ஜெகநாதன் கூறியதாவது:- இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம், 140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். இதனால், இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அது போல் கூட்டுறவு சங்கங்க ளில் உள்ள கைத்தறிநெச வாளர்களுக்கு 10 சத வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதும் வர வேற்க வேண்டிய அம்சம்.பட்டின் விலை அதிகமாக உள்ளது. கூட்டு றவு சங்கம் சார்பில், பட்டுச்சேலை நெய்வதற்கு பட்டு, சரிகை,நூல் ஆகியவை போதிய அளவு வழங்கப்படுவதில்லை.மிக குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, வாரத்திற்கு இரண்டு சேலைதான் நெய்ய முடியும். இது வாழ்வாதா ரத்துக்கு போது மானதல்ல.

    வாரத்திற்கு 4 முதல் 5 சேலைகள் நெய்யும் அளவிற்கு மூலப்பொரு ட்கள் வழங்க வேண்டும். கைத்தறி ரகங்க ளை சந்தை படுத்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அது பெயரளவிற்கு இல்லாமல் முறையாக நடத்தினால் நன்றாக இருக்கும்.நெச வாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை மத்திய அரசு சார்பில், வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், மருத்துவமனை சென்றாலும் சிகிச்சை பெறமுடியவில்லை.

    எனவே மாநில அரசு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். என பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • 100 பேருக்கு தொழிலாளர் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவில்வழியில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் 

    திருப்பூர்கோவில்வழி பஸ் நிலையம் பகுதியில் மாநகராட்சிதூய்மைப்பணியாளர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் 100 பேருக்கு தொழிலாளர் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவில்வழியில் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முதுகுளத்தூர் வட்டார ஓய்வூதியர் மன்ற செயற்குழு கூட்டம் டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார ஓய்வூதியர் மன்ற செயற்குழு கூட்டம் டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர்

    சிக்கந்தர்முன்னிலை வகித்தார். பொருளாளர் செந்தூரான் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2022-23-க்கான வரவு- செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஓய்வூதியர் அனைவருக்கும் புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் வங்கியில் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    மருத்துவ சிகிச்சைக்குரிய செலவுகள் காப்பீடு நிறுவனங்கள் வழங்குவதில் ஏற்படுத்தும் தாமதத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் செந்தூரான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளையும் செயலாளர் சிக்கந்தர் செய்திருந்தார்.

    ×