search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical college student dead"

    • ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வகுப்பறையில் மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மாணவரின் தாய் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகுமான். இவரது மனைவி ஜசீர். இவர்களது மகன் நிஜாஸ்(வயது22). இவர் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மாணவர் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மதியம் இவர் வகுப்பறையில் அமர்ந்து மருத்துவம் தொடர்பான பாடங்களை படித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார்.

    உடனே சக மாணவர்கள் நிஜாசை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நிஜாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அவருடன் படித்த சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மாணவரின் தாய் ஜசீருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கேரளாவில் இருந்து புதுவை விரைந்து வந்தார். பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவரின் உடல் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி கார் தாறுமாறாக ஓடியது.
    • சாலையில் இருந்து வெளியே பாய்ந்து அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    ஆம்பூர்:

    சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சண்முகி (22), நெல்லுரை சேர்ந்த நித்தின், கேரளாவை சேர்ந்த சுப்ரீத் (19), ரிஷாந்த் அகமது (20), அந்தமானை சேர்ந்த சுஜான்(18), ஆலினா (18) ஆகியோர் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு காரில் புறப்பட்டு வந்தனர். ரிஷாந்த் அகமது காரை ஒட்டி வந்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்து வெளியே பாய்ந்து அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மாணவி சண்முகி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×