என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Jegan Peiyasamy"

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி, சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டது.
    • அம்பேத்கார் நகர் பகுதியில் நடைபெற்று கொண்டு இருக்கும் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி,கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவோம் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி, சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டது.

    இதில் மேயர் ஜெகன் பெரியசாமி,கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அம்பேத்கார் நகர் பகுதியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான பொழுது போக்குவதற்கான இடமாகவும் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் பூங்காவினை மேயர் ஜெகன் பெரிய சாமி,கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், இங்கு நடைபெற்று வரும் பணிகள் விரைந்து முடிக்கப் பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் இந்தப் பூங்கா திறக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.

    ×