search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Masimagam"

    • திருக்கொடியொற்றத்துடன் மாசிமகத் தீர்த்தவாரி பெருவிழா தொடங்கியது.
    • ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெறும்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகத் திருக்குளத்தில் மாசிமகத் விழாவையொட்டி வருகிற 6-ந்தேதி அன்று பகல் 12 - மணிக்கு மேல் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் திருக்கோயில்களான அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர், சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவி ஸ்வநாதர், ஞானாம்பிகா சமேத காளஸ்திஸ்வரர், சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் இப் பெருவிழாவின் தொடக்க பூஜையான அனுக்ஞை, விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, என சிறப்பு பரிகார பூஜைகள் நேற்று இரவு செய்யப்பட்டு இன்று 25-ந்தேதி காலை திருக்கொடியொற்றத்துடன் மாசிமகத் தீர்த்தவாரி பெருவிழா தொடங்கியது.

    அதனை தொடர்ந்து இவ்வாலயங்களில் தினசரி காலையில் பல்லாக்கிலும், மாலையில் சுவாமி, அம்பாள் சூரியபிரபை, சந்திரபிரபை, சேஷம், கமலம், பூதம், சிம்மம், யானை, அன்னப்பட்சி, நந்தி, காமதேனு, குதிரை, கிளி, ரிசபம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா திருகாட்சியும், ஐந்தாம் திருநாளன்று ஓலைச்சப்பரம், ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    ×