search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marudhanadi dam"

    • அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதைத் தொடர்ந்து மதுரை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் உள்பட அதிகாரிகள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அணையில் உள்ள ஷட்டர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், அணையின் உறுதித்தன்மை, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அமைந்துள்ளது. இந்த நதியின் மொத்த உயரம் 74 அடியாகும். தாண்டிக்குடி, பண்ணை க்காடு, கடுகுதடி, கோம்பை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இந்த அணை நீர் மூலம் ஆத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்ய ம்பாளையம் பேரூராட்சிகள், சித்தரேவு, அய்யங்கோட்டை, தேவரப்பன்பட்டி ஊராட்சி களுக்கு குடிநீர் வினியோக த்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதைத் தொடர்ந்து மதுரை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அணையில் உள்ள ஷட்டர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், அணையின் உறுதித்தன்மை, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மஞ்சளாறு வடிநில க்கோட்டை செயற்பொறி யாளர் சுகுமார், உயர் செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் இ.பெரியசாமி இன்று திறந்து வைத்தார்.
    • விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கூறினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் இ.பெரியசாமி இன்று திறந்து வைத்தார்.

    கலெக்டர் விசாகன், வேலுச்சாமி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மருதாநதி அணையில் இன்று முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடியும், பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடியும் ஆக மொத்தம் நாளொன்றிற்கு 90 கன அடிக்கு மிகாமலும் மற்றும் மீதமுள்ள 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 20 கன அடிக்கு மிகாமலும் 120 நாட்களுக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,583 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதன்படி, ஆத்தூர் வட்டத்தில் அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் 5943 ஏக்கர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் சேவுகம்பட்டி. கோம்பைபட்டி ஆகிய பகுதிகளில் 640 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

    மேலும் மருதாநதி அணை அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மருதாநதி அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கூறினார்.

    ×