search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Martrathai Thedi Program"

    • சாத்தான்குளம், எட்டயாபுரம் ஆகிய போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி குரும்பூர், முத்தையாபுரம், தூத்துக்குடி வடபாகம், சாத்தான்குளம், எட்டயாபுரம் ஆகிய போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் குரும்பூர் பரதர் தெருவில் பொது மக்களிடமும், முத்தையா புரம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமை யிலான போலீசார் முத்தையாபுரம் பகுதி பொது மக்களிடமும், தூத்துக்குடி வடபாகம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போலீசார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் பொது மக்களிடமும், சாத்தான் குளம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் சந்தோஷபுரம் பகுதி பொது மக்களிடமும், எட்டயாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அங்காள ஈஸ்வரி தலைமையிலான போலீசார் எட்டயாபுரம் ஆர்.சி தெரு பகுதி பொது மக்களிடமும் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ்.செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் போலீசார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் .

    குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர்.

    ×