search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maramma temple. devotees"

    கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    பெங்களூரு:

    கர்நாடகவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    அந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார்கள். வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.



    அதில் நேற்று முன்தினம் நளினி என்ற பெண் பலியானார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரியை சேர்ந்த காலப்பா என்ற பூசாரியை பிடிப்பதற்காக போலீசார் கிருஷ்ணகிரி விரைந்துள்ளனர்.  #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    கொள்ளேகால்:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள மாரம்மா அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கோபுரத்தின் மீது கலசங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த பிரசாதத்தை சாப்பிட்ட 12 பேர் பலியானார்கள். 104 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    அதில் 26 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

    இதனால் இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.  #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மன் கோவில். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூஜைகள் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    சிறிதுநேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சிலரது நிலைமை மோசமானது. இதையடுத்து, சுமார் 40க்கு மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், பிரசாதம் சாப்பிட்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்து கிடந்தன என முதல் கட்ட தகவல் வெளியானது.



    இந்நிலையில், கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர். #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
    ×