search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimurtheeswaram area"

    • நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரும்பாலான வார்டுகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
    • தி.மு.க. பகுதி செயலாளருமான தச்சை சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரும்பாலான வார்டுகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    குறிப்பாக நெல்லை 3-வது வார்டுக்கு உட்பட்ட பாலபாக்யா நகர், மணிமூர்த்தீஸ்வரம் பகுதிகளில் நேற்று பெய்த மழையால் வாழவந்த அம்மன் கோவில் தெரு, நாடார் தெருக்களில் நடந்து கூட செல்லமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டனர்.

    இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் 3-வது வார்டு கவுன்சிலரும், தி.மு.க. பகுதி செயலாளருமான தச்சை சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு நேரில் சென்ற தச்சை சுப்பிரமணியன் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டார்.

    பின்னர் மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின் மற்றும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மழைநீரை வடிய வைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டார். கவுன்சிலரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இதற்கிடையே அப்பகுதி மக்களின் கோரிக்கையான சாலை சீரமைப்பு குறித்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார். அவரும் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

    ×