என் மலர்
நீங்கள் தேடியது "mango seller"
- வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மெகராஜ் (22), விவசாயியான இவர் மாங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
- இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற வர் பின்னர் வீடு திரும்பவில்லை.
சேலம்:
சேலம் கருப்பூரை அடுத்த வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மெகராஜ் (22), விவசாயியான இவர் மாங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
திடீர் மாயம்
இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற வர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மெகராஜ் வெளியில் சென்றதும் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்தியதும் தெரிய வந்தது. அப்பாது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது மெகராஜ் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி துடித்தனர்.
கிணற்றில் பிணம்
பின்னர் சம்பவம் குறித்து கருப்பூர் போலீசாருக்கும் தீய ணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அவர்கள் மெகராஜ் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் அவரை அழைத்து சென்ற வர்களிடம் விசாரணை நடத்திய போது, ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகவும், தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றிற்கு சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் கூறினர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






