search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandala Puja"

    • கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
    • தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    சபரிமலை:

    மண்டலபூஜை சீசனையொட்டி, கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    ஆனால், 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு அதிகபட்சமாக 70 பக்தர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,200 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் செய்ய முடியும். தினசரி 17 மணிநேரம் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் சபரிமலையில் குவிந்து வரும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடிவதில்லை. இதனால் 18 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து 18 மணி நேரமாக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதன்படி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

    இந்த நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் சபரிமலையில் முகாமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வசதியாக, தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனுக்குடன் மலையிறங்க வேண்டும்' என்று ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் சீசனையொட்டி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்குகிறது.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.5.10 கோடியில் திருப்பணிகள் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கும்பாபிஷேக விழாவுக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. 25-ந் தேதி முதற் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி யது. தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

    கும்பாபிஷேக விழா

    நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர் நேரு மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற கோட்டை மாரியம்மன் தங்க தேரோட்டத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்கு கிறது. அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் - செல்வி சார்பில் கோட்டை மாரியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் சாமி தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது.
    • அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.

    நாமக்கல்:

    பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு காவிரியின் வடகரையில் அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.நேற்று மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு காலை நன் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.மண்டல பூஜை 12 நாள் நிறைவு விழாவை முன்னிட்டு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மதுரை தாதம்பட்டியில் பால விநாயகர் கோவில் மண்டல பூஜை நடந்தது.
    • இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் மண்டலபூஜை நடந்து வந்தது. 48-வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி வெள்ளை நிறபால விநாயகருக்கு பால், பன்னீர், தேன், நெய், திரவிய பொடி, திருநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தது. விநாயகர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    • புதிதாக கட்டப்பட்ட நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம்‌ நடந்தது.
    • 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் 60 அடி நீளமுடைய நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

    தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த மண்டல பூஜை நிறைவு பூர்த்தியை முன்னிட்டு பட்டாணி கோவிலில் இருந்து பழங்கள், வஸ்திரங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 51 வரிசை தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.

    பின்னர், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி கோலிலை சுற்றி வலம் வந்து புனிதநீர் கொண்டு மகா மாரியம்மன், நாக விநாயகர், நாகம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்நது, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா முன்னிட்டு நேற்று 15 நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கடந்த 11 ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் 15 ம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது விழாவையொட்டி நேற்று முன்தினம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.

    மண்டல பூஜை விழா முன்னிட்டு கோயம்புத்தூர் கிளாசிக் அன்பு மற்றும் இவரது குடும்பத்தினர் சார்பாக கலந்து கொண்ட சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை எக்ஸெல் ஜி.குமரேசன், ரைஸ் மில் உரிமையாளர் ராஜா ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன் மற்றும் வீர ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • தொட்டியம் தர்மசாஸ்தா அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது
    • மண்டல பூஜைைய முன்னிட்டு மூலவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரம் மதுரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபாடு நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜைைய முன்னிட்டு மூலவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பழ வகைகள், தேன், நெய், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உட்பட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்று பின்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், மாலை அணிந்த ஐயப்ப சாமிகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு மாலை வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ தர்மசாஸ்தா ஐய்யப்பன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.


    • ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது.
    • மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு ,அகில பாரத அய்யப்பா சங்கத்தினர் செய்திருந்தனர்.

    உடுமலை:

    உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அய்யப்ப சாமி அலங்கரிக்கப்பட்டு செண்டை மேளம் முழங்க கோவிலில் இருந்து புறப் பட்டு தில்லைநகர் ருத்ரப்பா நகர் ,ராமசாமி நகர், கங்காதரன் லேஅவுட்முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு ,அகில பாரத அய்யப்பா சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நாளை மண்டல பூஜை நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜைக்கான கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடந்தது.

    வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்ட ளையின் நிர்வாக அறங்கா வலரும், கோவில் தலைமை குருக்களுமான ஆர்.எஸ்.மோகன் கூறியதாவது:-

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெறும் மண்டல பூஜையானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நாளை (27-ந்தேதி) காலை 8 மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும்.

    அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்ம குளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷே கதத்துடன் ஆராட்டு விழா நடைபெறும். சன்னி தானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டு, மூலவருக்கு 33 வகையான அபி ஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணிவரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இரவு 12 மணிக்கு 2023ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ரகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு, பல ஆண்டுகளாக ராம நாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக அய்யப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிஷேகத்திற்கு நெய் கொண்டு வருவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டும் ராமநாதபுரம் மல்லம்மாள் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக சரணகோசம் முழங்க அபிஷேக நெய் கொண்டு வந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் புகழ்பெற்ற வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் ஆண்டு தோறும் இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் வல்லபை அய்யப்பன் கோவிலில் இன்று காலை மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக தலைமை குருக்கள் மோகன் சாமி தலைமையில் கோவிலில் கணபதி ஹோமமும், அஷ்டா பிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு அய்யப்பன் சன்னதிக்கு எதிரே உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்திபரவசத்துடன் முழக்கமிட்டனர். வல்லபை அய்யப்பா சேவை நிலையம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.மோகன் சுவாமி கூறியதாவது:-

    ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை யானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    தினசரி காலை மற்றும் மாலை இருவேளையும் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடைபெறும். வரும் 26-ந்தேதி மாலை பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடைபெறும். அப்போது கோவில் நடைசாத்தப்பட்டு இருக்கும். 27-ந்தேதி காலை 8மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும். காலை 10 மணிக்கு சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனையும், மகா அன்னதானமும் நடைபெறும். 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    • முலவர்களுக்கு மகாதீப ஆராதனை நடந்தது
    • பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள தாழையுத்து கிராமத்தில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது.

    நேற்று 48 வது நாள் மண்டல அபிஷேகம் நிறைவு நாளை முன்னிட்டு பொதுமக்கள் சார்பில் 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து கோவிலில் சூலம் வடிவில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் மாரியம்மன் முலவர்களுக்கு பாலாபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் விழா குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.

    ×