search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandala Mahotsava Festival"

    • அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது.
    • 1-ம் நாளான திருவிழாவான 17-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    செங்கோட்டை:

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது. நாளை 16-ந்தேதி திருஆபரணபெட்டி ஊர்வலம் நடக்கிறது. 1-ம் நாளான திருவிழாவான 17-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 2,3,4,5 ம் நாள் திருவிழாக்களில் உற்சவபலி பூஜை. 7,8-ம் நாள் திருவிழாக்களில் கருப்பன் துள்ளல்.

    9-ம் திருவிழா அன்று தேரோட்டம். 10 ம் திருவிழா அன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது. 27-ந்தேதி மண்டல பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உற்ஷவபலி பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். காலை 10 மணிக்கு விளக்கு வைத்தல் எனும் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேல்சாந்தி ஸ்ரீகோவிலில் இருந்து உற்ஷவ மூர்த்தி விக்ரகத்தை விளக்குடன் வெளியே எடுத்து வந்து உள்பிரகாரத்தில் அதற்கன அமைக்கபட்ட சப்பரத்தில் சுவாமியை எழுந்தருள செய்வார்கள்.

    பின்னர் மரபாணி கொட்டி அனைத்து உப தெய்வங்களையும் அழைத்து சுவாமி முன்னிலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பலி எனும் நைவேத்தியம் படைக்கபடும். இதே போல் வெளிபிரகாரத்தில் உள்ள உப தெய்வங்களுக்கு இதே போல் படைக்கபடும். தொடர்ந்து 16 சுற்றுக்கள் வெளிபிரகாரத்தில் சுற்றி வந்து படைக்கபட்டு கடைசியாக உற்ஷவபலி பூஜையை நிறைவு செய்து ஸ்ரீகோவில் நடை திறந்து சுவாமியை உள்ளே வைத்து நிறைவு செய்வார்கள்.

    இந்த பூஜை மிகவும் விஷேசமான பூஜை ஆகும். இந்த பூஜை சபரிமலையிலும் அச்சன்கோவிலிலும் தான் நடைபெறுகிறது. இந்த பூஜையை செய்வதும், கலந்து கொள்வதும், பார்ப்பதும் மிகவும் சிறப்பானது என கருதப்படுகிறது.

    ஏனென்றால் ஒரே பூஜையில் அய்யப்பன் உட்பட அனைத்து தெய்வங்களையும் அழைத்து நைவேத்தியம் படைத்து சிறப்பு பூஜை செய்வதால் எல்லா தெய்வங்களுக்கும் எல்லாம் படைத்து எல்லா பூஜைகளும் செய்ததாக ஐதீகம்.

    ×