search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manathakkali keerai recipes"

    வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மணத்தக்காளி கீரை துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளி கீரை - 1 கப்
    பெருங்காய தூள் - 1 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 1
    பச்சை மிளகாய் - 2
    உளுந்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி
    பூண்டு - 6 பற்கள்
    சின்ன வெங்காயம் - 10
    மிளகு -  6
    தேங்காய் துருவல் - கால் கப்
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    அடி கனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காய தூள் போட்டு பொரிய விடவும்.

    அடுத்து அதில் ஒரு காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.

    அடுத்து மிளகு, பூண்டு பற்கள், பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.

    அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரையை போட்டு நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.

    ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் தேங்காய் துருவல், புளி, தேவையான அளவு உப்பு, சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    மணத்தக்காளி கீரை துவையல் தயார்.

    இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×