என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maheswarar Sametha Malayamman Temple"

    • மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) கொடை சாத்துதலுடன் தொடங்க உள்ளது.
    • அதனை முன்னிட்டு நேற்று காலையில் மகேஸ்வரர் சமேதமாலையம்மன் கோவில் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) கொடை சாத்துதலுடன் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று காலையில் மகேஸ்வரர் சமேதமாலையம்மன் கோவில் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து பந்தல்கால் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், முன்னாள் தலைவர் பூவலிங்கம், துணைத்தலைவர் பரமசிவம், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ரத்தினவேல் மற்றும் சின்னத்துரை, மாதவராஜ், கல்யாணசுந்தரம், கருப்பசாமி, மாரிகண்ணன், நடராஜன், நம்பிராஐன், தங்க மாரியப்பன், முனியசெல்வம், செல்வம், ரமேஷ், குன்னிமலை ராஜா, ஸ்ரீமாலையம்மன் பஐனை குழு பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×