என் மலர்
நீங்கள் தேடியது "Mahalingaswamy"
- திருவாவடுதுறை ஆதீனம் அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கொடி அசைத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
- அம்பாள் பிரகத்குஜாம்பிகை சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டது.
கும்பகோணம்:
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க சுவாமி திருக்கோயில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார தலமாகவும், மத்தியார்ஜூன திருக்கோயிலாகவும் விளங்கி வருகிறது.
இக்கோயிலில் தைப்பூச பெருவிழா ஆண்டு தோறும் 10நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் அந்த வகையில் கடந்த 18ம் தேதி விநாயகர் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 26ம் தேதி மகாலிங்க சுவாமி திக்குத் திருகொடியேற்றம் வெகு விமரிசையாக நடந்தது.
9ம் நாள் விழாவான இன்று 80 டன் சவுக்கு மரங்களை கொண்டு 20க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு 40 தினங்களாக அலங்கரிக்கப்பட்ட ஐந்து பிரம்மாண்ட தேர்களில் விநாயகர், சுப்ரமணியர் வள்ளி தெய்வானை, மகாலிங்க சுவாமி, பிரகத் குஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் என அதிகாலை 5 மணிக்கு அவரவர் தேர்களில் எழுந்தருளினர்.
காலை 10 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதினம் அம்பலமான தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் கொடி அசைத்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தார்.
காலை முதல் திரண்ட 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் முதலில் விநாயகர் தேரை வடம் பிடிக்க தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது பின்னர் மகாலிங்க சுவாமி பிரம்மாண்ட தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் மகாலிங்கா மகாலிங்கா என கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து அம்பாள் பிரகத் குஜாம்பிகை சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது.
திருவிடைமருதூரில் காவல்துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் திருவிடைமருதூர் தீயணைப்பு துறை அலுவலர்கள் என ஏராளமானோர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.