என் மலர்
நீங்கள் தேடியது "Madurai Heavy rains"
- மதுரையில் கனமழை கொட்டித் தீர்த்தது.
- இதனால் மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நேற்று மாலை ஆடிவீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து கோவில் யானை பார்வதி, மழைநீர் சூழ்ந்த வளாகத்தைக் கடந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
மேலும் சாமி சன்னதி, கொடிமரம் பகுதி மற்றும் ஆடிவீதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் திடீரென பெய்யத் துவங்கிய கனமழை காரணமாக, மதுரையின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.






