search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras HC chief justice"

    ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி, மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்டக்கூடாது என தெரிவித்தார். #JayaMemorial #marinabeach
    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உள்ளது. இதில் மிகப்பெரிய நினைவிடம் கட்ட அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார்.



    ‘மெரினா கடற்கரையில் எந்த கட்டுமானங்களும் எழுப்பக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட கருத்துக்கும் சட்டப்பூர்வமான கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது. தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும், வழக்குகளில் சட்டத்திற்கு உட்பட்டு, வழக்கறிஞர்களின் வாதங்களைப் பொருத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது’ என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். அத்துடன் வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #JayaMemorial #marinabeach
    ×