என் மலர்
நீங்கள் தேடியது "Madhu Mahajan"
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மதுமகாஜன் என்பவரை தேர்தல் ஆணையம் இன்று நியமனம் செய்துள்ளது. #LSpolls #MadhuMahajan #SpecialExpenditureObservers
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
பாராளுமன்ற தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான வேலைகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜன் என்பவரை நியமனம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் தேர்தல் பார்வையாளராக ஷைலேந்திர ஹண்டா என்பவரை நியமனம் செய்துள்ளது.
தேர்தல் காலத்தில் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. #LSpolls #MadhuMahajan #SpecialExpenditureObservers