search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lumpy disease"

    • 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன
    • மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. மடிவீக்க நோயால் கறவை மாடுகள் பாதிக்கின்றன என பால் உற்பத்தியாளர்கள் கூறி வரும் நிலையில் பொங்கலூர் கே.வி.கே., திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவ அறிவியல் துறை இணை பேராசிரியர் சித்ரா விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மடிவீக்க நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை விளக்கினார். மாட்டுத்தொழுவம், அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.

    கறவைக்கு முன், கறவை மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமிநாசினி மருந்தை தண்ணீரில் கலந்து நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுத்தால் மடி நோய் ஏற்படும். எனவே அவை படுக்காமல் இருக்க பசுந்தீவனம் அல்லது உலர் தீவனம் ஏதாவது ஒன்றை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பாலை கன்றுகள் குடிக்கும் போது தீவிர இதய தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.

    சோற்று கற்றாழையை 250 கிராம் அளவுக்கு சிறு, சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 50 கிராம் விரலி மஞ்சள், 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து, நன்கு அரைத்து இந்த கலவையை 100 மி., தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிப்பகுதி முழுக்க, நோய் தாக்குதல் குறையும் வரை தினமும் 8 முதல் 10 முறை பூச வேண்டும்.

    நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×