என் மலர்

  நீங்கள் தேடியது "love girl"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலை பெண் ஏற்காததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வெள்ளகோவில்:

  சீர்காழி திருநன்னியூரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு பிஸ்கெட் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை செய்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

  ஒரு கட்டத்தில் தனது காதலை இளம்பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் வாலிபரின் காதலை ஏற்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் கம்பெனியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ×