என் மலர்
நீங்கள் தேடியது "lorry motorcycle accident"
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு அடுத்த வடுகனூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவரது மனைவி மீனாட்சி (55).
நேற்று துரைசாமி தனது மனைவி மீனாட்சியுடன் செம்பாகவுண்டனூரில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர்கள் மாலையில் மோட்டார் சைக்கிளில் ஈரோடு-கருர் மெயின் ரோட்டில் வெள்ளோட்டம் பரப்பு அருகே எல்லையூர் பிரிவில் வந்து கொண்டிருந்தனர்.
வீட்டுக்கு செல்வதற்காக திரும்பும்போது கரூர்- ஈரோடு மெயின் ரோட்டில் எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே மனைவி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். துரைசாமி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.(வயது60), விவசாயி. இவருடைய மனைவி பானுமதி (55). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தனர்.
இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவை வழியாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோடு வணிகவரித்துறை அலுவலகம் அருகே வந்த போது பின்னாள் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜூம்-பானுமதியும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் இவர்களை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பானுமதி பரிதாபமாக இறந்து போனார். கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.