search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loan Scam"

    பெண் மேலாளர் உமா மகேஸ்வரி மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் உள்ளது. இங்கு 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக உமாமகேஸ்வரி (வயது 38) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றினார்.

    இவர் குடியாத்தம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றிய காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து துறை உயர் அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து குடியாத்தம் வங்கியில் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

    அதன் முடிவில் மன உமாமகேஸ்வரி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் உமாமகேஸ்வரி 33 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது செய்தனர். அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    பெண் மேலாளர் உமா மகேஸ்வரி மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×