search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Livestock disturbance"

    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துசென்று கொண்டிருக்கும்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயப்படாமல் வந்து செல்ல முடியும்.

    குனியமுத்தூர்:

    கோவை உக்கடத்தில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியில் சாலையின் நடுவில் ஒரு பராசக்தி கோவில் உள்ளது. கோவிலின் இருபுறங்களிலும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக சென்றுகொண்டிருக்கும்.

    இந்நிலையில் கோவிலின் வாசலில் ,எந்த நேரமும் நான்கைந்து கால்நடைகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறது. கால்நடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோவிலின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சாலையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துசென்று கொண்டிருக்கும். இந்த வாகனங்களின் போக்குவரத்திற்கும் இந்த கால்நடைகள் இடையூறாக நடுரோட்டில் நின்று கொண்டிருக்கும். கோவில் வாசலில் கூட்டமாக கால்நடைகள் நிற்பதால் கோவிலுக்கு வரும் பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்து திரும்பி செல்லும் நிலை உள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் அனைத்து சாலைகளும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த சூழலிலும் கூட இந்த கால்நடைகள் இங்குதான் அடைக்கலமாக இருந்தது.

    இந்தக் கால்நடைகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும் பகுதியானது உக்கடம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் இரண்டு கோவில்கள் இவ்வாறு மிகவும் பரபரப்பாக காணப்படும் இடம் ஆகும்.

    சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்தும் சீராகும். கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயப்படாமல் வந்து செல்ல முடியும்.

    ×