என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor shops closed on"

    • ராமலிங்கர் நினைவு தினத்தை மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து வடலூர் ராமலிங்கர் நினைவுதினமான வரும் 5-ந் தேதி ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ளபார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்றும்,

    அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×