search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LIC Welfare Association meeting"

    • அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. மற்றும் எல்.ஐ.சி. ஊழியர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது.
    • பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு உடனடியாக 5 ஜி சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    நெல்லை:

    அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. மற்றும் எல்.ஐ.சி. ஊழியர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது. கோட்டத் தலைவர் அரிராமன் தலைமை தாங்கினார். தென்மண்டல தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சுடலை மணி, பொருளாளர் ராமர் ஆகியோர் அறிக்கைகள் வாசித்தனர்.

    கூட்டத்தில் எல்.ஐ.சி.யை தனியாருக்கு தரைவார்க்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு உடனடியாக 5 ஜி சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முதுநிலை கோட்ட மேலாளர் குமார், அகில இந்திய நிர்வாக செய லாளர் வீரமணி, அமைப்பு செயலாளர் நாக ராஜன், வணிக மேலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் முருகன், பரத், மோகன்ராஜ், ராஜூ, அருணாச்சலம், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×