search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lecturer"

    • கல்லூரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் மகளை விட்டுவிட்டு செல்வது தந்தையின் வழக்கம்
    • அப்பகுதியில் வெப்பம் சுமார் 26 டிகிரி சென்டிகிரேடு இருந்து வந்தது

    தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரியன் தீபகற்பத்தில் உள்ள நாடு போர்ச்சுக்கல். இதன் தலைநகரம் லிஸ்பன். லிஸ்பன் நகரில் உள்ள கேம்பொலைடு எனும் இடத்தை தலைமையகமாக கொண்டது அந்நாட்டு அரசாங்கத்தின் நோவா பல்கலைக்கழகம்.

    இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் விரிவுரையாளராக பணிபுரிபவர் ஒருவர் அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கான காப்பகத்தில் தனது 10-வயது மகளை விட்டுவிட்டு தனது கல்லூரி பணிக்கு செல்வது வழக்கம்.

    இரு தினங்களுக்கு முன் காலை 08:00 மணியளவில் அவர் தனது காரில் மகளை ஏற்றி கொண்டு காப்பகத்திற்கு முன்பாக 300 அடி தூரத்தில் காரை நிறுத்தியுள்ளார். தனது மகளை கல்லூரி காப்பகத்தில் விட்டுவிட்டு செல்லாமல், வழக்கத்திற்கு மாறாக காரிலேயே விட்டுவிட்டு சென்றார்.

    கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளில் கவனமாக இருந்த அவர், பிறகு மீண்டும் தனது காருக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது மகள் அதில் சுயநினைவின்றி கிடந்தார். பதட்டமடைந்த அவர், அவளை சுயநினைவிற்கு கொண்டு வர அனைத்தையும் செய்தும் அக்குழந்தைக்கு நினைவு திரும்பவில்லை.

    அந்நாட்டு அவசரகால மருத்துவ சேவை பிரிவிற்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து குழந்தைக்கு அவசர சிகிச்சையளித்து நினைவை மீட்க போராடினர். அவசரகால சேவை பிரிவினர் வரும்போதே அந்த இடத்திற்கு சிறுமியின் தாயும் வந்தார்.

    மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயன்றும் துரதிர்ஷ்டவசமாக சிறுமி நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். தாயும், விரிவுரையாளரும் இச்சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். அப்பெற்றோருக்கு உளவியல்ரீதியான உதவியும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் வெப்பத்தின் அளவு சுமார் 26 டிகிரி சென்டிகிரேடு அளவிற்கு இருந்ததால், காருக்குள்ளே 50 டிகிரி அளவிற்கு அதிகரித்திருக்கலாம் என்பதால் அதனால் அச்சிறுமி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மேலும் விவரங்கள் தெரிய வரும்.

    இருப்பினும், பரிசோதனை அறிக்கை மக்களின் பார்வைக்கு வெளியிடப்படாது என தெரிகிறது.

    • கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
    • ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    உடுமலை:

    தமிழகத்திலுள்ள உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில், வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி, வணிகவியல், கணக்கியல் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தனியார் கல்லூரிகள் போன்று அரசு கல்லூரிகளிலும், பல்வேறு தொழில் அமைப்பினர் 'கேம்பஸ் இன்டர்வியூ' வாயிலாக, மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றனர்.மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் பல இடங்களில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போதியளவில் விரிவுரையாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை.இதனால் கல்வி போதிப்பு பணியில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, உடனே காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×