என் மலர்
நீங்கள் தேடியது "learning to"
- எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.
- மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு சென்னி மலை வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்து ரைத்தார்.
மேலும் சென்னிமலை வட்டார வள மேற்பார்வையாளர் கோபிநாத் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி கூறினார்.
பள்ளி ஆசிரியை ஆஷா குட்டி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் வகுப்பறை களங்கள் பற்றி செயல்விளக்கம் அளித்தார். மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர் பொது மக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.






