search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Latecomers"

    • குரூப்-4 தேர்வு எழுத காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
    • விதிமுறைகளை பின்பற்றி காலம் கடந்து வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

    நெல்லை:

    குரூப்-4 தேர்வு எழுத காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் நெல்லை மாநகரில் உள்ள பல்வேறு மையங்களுக்கு காலை 9 மணிக்கு பலர் தேர்வு எழுத வந்தனர்.

    அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாருக்கும் தேர்வர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை ஆய்வு செய்வதற்காக நெல்லை சப்-கலெக்டர் சந்திரசேகர் வந்தார். அப்போது 8.30 மணியை கடந்து வந்த தேர்வர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது சப்-கலெக்டர் சந்திரசேகரை பார்த்ததும் அவரிடம் தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் விதிமுறைகளை பின்பற்றி காலம் கடந்து வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பாளை ராஜகோபால நகரை சேர்ந்த டாக்டர் சிவராஜா மனைவி ஜெனிபர் என்பவர் பாளை தனியார் கல்லூரியில் அமைக்கபட்டிருந்த மையத்தில் தேர்வு எழுத தனது 10 மாத கைக்குழந்தையுடன் வந்தார்.

    பின்னர் தனது கணவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தேர்வு அறைக்குச்சென்றார். அப்போது தனது குழந்தைக்கு உணவு ஊட்டி அக்கரையுடன் சிவராஜா கவனித்துக்கொண்டார்.

    ×