search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land plot"

    • 120 குடும்பங்கள் இருக்க இடம் இல்லாமல் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் தங்கி குடியிருந்து வருகின்றனர்.
    • இதுவரை எந்த அதிகாரிகளும் இவர்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை

    காரமடை

    மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பா–ளையம் ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் வேடர்காலனி உள்ளது.

    இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சுமார் 120 குடும்பங்கள் இருக்க இடம் இல்லாமல் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் தங்கி குடியிருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 4.50 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இப்பகுதி மக்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவல கத்தில் மனுக்கள் கொடுக்க ப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் இவர்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வேடர்காலனி கிராம மக்கள் 80க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு துணை வட்டாட்சியர் தெய்வபாண்டியம்மாள் மற்றும் காவல் துறையினர் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நீலகிரி மாவட்டத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் இங்கு உள்ள அரசு அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் இவர்களின் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் எடுத்து கூறி தீர்வு காணுவதாக கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×