search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land damage"

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரூர் மாவட்டத்தில் 155 ஏக்கர் நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #cauveryriver
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டத்தில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரூர் மாவட்டத்தில் 90 குடியிருப்பு பகுதிகளிலும் 155 ஏக்கர் விளை நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.  

    அமராவதி ,பவானி, நொய்யல் போன்ற ஆறுகளில் இருந்து காவிரியில் கலந்து வரும் நீரின் அளவானது சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் 90 குடும்பத்தை சேர்ந்த 275 பேர் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பெட்ஷீட், பாய் ,உணவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை ,காவல்துறை ஆகிய 3 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு செய்த பிறகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministermrvijayabaskar #cauveryriver
    ×