search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurinjipadi teacher murder"

    செல்லமாக வளர்த்த தனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டானே என்று குறிஞ்சிப்பாடியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். #KurinjipadiMurder
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளியின் வளாகத்தில் ஆசிரியை ரம்யாவை வாலிபர் ராஜசேகர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தாய் வள்ளி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாள். அப்போது அவள் தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    அதே பஸ்சில் விருத்தகிரிகுப்பத்தை சேர்ந்த வாலிபர் ராஜசேகரும் சென்று வந்துள்ளார். அவர் அடிக்கடி ரம்யாவிடம் பேசி வந்தார்.

    அப்போது, நான் உன்னை காதலிப்பதாக கூறிவந்துள்ளார். இதனை ரம்யா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பஸ்சில் செல்லும்போது ரம்யாவின் செல்போனை ராஜசேகர் பறித்துள்ளார். மாலையில் ரம்யா வீட்டுக்கு வந்தவுடன் உனது செல்போனை எங்கே என்று கேட்டபோது, அவளது தோழியிடம் கொடுத்திருப்பதாக கூறினார். அவளது தோழியிடம் கேட்டபோது என்னிடம் செல்போனை ரம்யா தரவில்லை என்று கூறினாள்.

    அதனை தொடர்ந்து ரம்யாவிடம் கேட்டபோது, ராஜசேகர் செல்போனை பறித்து விட்டதாக ரம்யா கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென்று சிலருடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

    ரம்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ராஜசேகர் கேட்டார். நாங்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டோம்.

    அப்போது ராஜசேகர் ஆத்திரம் அடைந்து ரம்யாவையும், அவரது தங்கையையும் கழுத்தை அறுத்து கொன்று விடுவதாக மிரட்டினார். ஆனால், நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ரம்யா குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவளுக்கு புதிதாக ஒரு செல்போன் வாங்கி கொடுத்தோம். இந்த நம்பரை எப்படியோ ராஜசேகர் தெரிந்து கொண்டான்.

    அதன் மூலம் அவர் ரம்யாவின் உறவினர்களிடம், நான் அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளான். மேலும் ரம்யாவுக்கு செல்போனில், எனது காதலை ஏற்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்பி உள்ளான்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற என் மகளின் கழுத்தை அறுத்து ராஜசேகர் கொன்றுள்ளான். செல்லமாக வளர்த்த எனது மகளின் வாழ்க்கையை பாவி மகன் சீரழித்து விட்டானே.

    இவ்வாறு அவர் கூறினார். #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்றுவிட்டு ஓடிய வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    குறிஞ்சிப்பாடி சின்ன கடை வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரம்யா (22).

    கடலூரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்துள்ளார். அப்போது விருத்தகிரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரும் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார். ரம்யாவும் ராஜசேகரும் ஒரே பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்கள்.

    இருவரும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ராஜசேகர் ரம்யாவை காதலிப்பதாக கூறினார். அதற்கு ரம்யா மறுத்தார். ஆனாலும் ராஜசேகர் விடாமல் பல முறை காதலிப்பதாக கூறியுள்ளார். ராஜசேகரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ரம்யா ‘நான் காதலிக்க மாட்டேன், நீ வேண்டும் என்றால் எங்கள் வீட்டில் வந்து பேசிக்கொள்’ என கூறியுள்ளார்.

    6 மாதத்துக்கு முன் ரம்யா வீட்டிற்கு வந்து ராஜசேகர் பெண் கேட்டார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் முடியாது என மறுத்துள்ளனர். அதன் பிறகு ரம்யா ராஜசேகரை புறக்கணித்தார். இதனால் ராஜசேகர் ஆத்திரம் அடைந்தார். ரம்யா ஆசிரியையாக பணியாற்றிய குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு நேற்று காலை சென்றார்.

    பள்ளியில் தனியாக இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். கழுத்தில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிழந்தார். ரம்யாவின் வலது கை விரல்களும் துண்டாகின.

    நேற்று மாலை ராஜசேகரின் சகோதரி ஆனந்தியின் செல்போனுக்கு அவர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    ராஜசேகரின் செல்போன் டவர் சிக்னலை வைத்து போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என ராஜசேகர் ரம்யாவை கொலை செய்தாரா? கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வெறும் மிரட்டலா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா பள்ளியை சென்றடைந்தார். அப்போது பள்ளிக்கு மற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் யாரும் வரவில்லை. பள்ளி வளாகத்தில் ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென்று தனியாக நின்று கொண்டிருந்த ஆசிரியை ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதனால் ரம்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆட்டை அறுப்பது போல் ரம்யாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரம்யா பலத்தகாயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரம்யா இறந்ததை அறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் வந்தார். அங்கு ஆசிரியை ரம்யா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

    பின்னர் அவர் இதுகுறித்த பள்ளி நிர்வாகத்துக்கும், குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தெரிவித்தார்.

    உடனே நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்பு இந்த கொலை தொடர்பாக அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



    மேலும் இன்று காலை பள்ளி வேலைநேரத்திற்கு முன்பாகவே ரம்யா வந்தார். ஏன் வந்தார். ரம்யாவை கொலை செய்த வாலிபர் யார்? அவர் எதற்காக ரம்யாவை கொலை செய்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகளின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தந்தை சுப்பிரமணியனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினருடன் எனது வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் அவர் என் மகள் ரம்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். அதன் பின்னர் ரம்யா பள்ளி செல்லும்போது வழி மறித்து, தன்னை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜசேகர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு ரம்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை ரம்யா பள்ளி வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். எனவே இந்த சம்பவத்துக்கும், ராஜசேகருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையொட்டி வாலிபர் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு இன்று 1 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    பள்ளிவளாகத்தில் ஆசிரியை கொடூர முறையில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #KurinjipadiMurder
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இன்று காலை பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா பள்ளியை சென்றடைந்தார். அப்போது பள்ளிக்கு மற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் யாரும் வரவில்லை. பள்ளி வளாகத்தில் ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மவாலிபர் தனியாக நின்று கொண்டிருந்த ரம்யாவை சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் அவரை ஆட்டை அறுப்பதை போல் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதில் ரம்யா பலத்தகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த மர்மவாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் ரம்யா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இந்ததகவலை பள்ளி நிர்வாகத்துக்கும், குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தெரிவித்தார். நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


    மேலும் இன்று காலை பள்ளி வேலைநேரத்திற்கு முன்பாகவே ரம்யா வந்தது ஏன்? ரம்யாவை கொலை செய்த மர்மவாலிபர் யார்? அவர் எதற்காக ரம்யாவை கொலை செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் குற்றவாளி உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு இன்று 1 நாள் விடுமுறை விடப்பட்டது.

    ஒருதலை காதல் பிரச்சனையில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  #KurinjipadiMurder
    ×