search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koodankulam Nuclear"

    • பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 1 மற்றும் 2-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் பிரிந்து வழங்கப்படுகிறது.

    மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எரிபொருள் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கூடன்குளத்தின் முதல் 2 அணு உலைகள் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்கள் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அந்த அணு உலைகளில் மின் உற்பத்தி தொடங்கும்.

    இந்நிலையில் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ( திங்கட்கிழமை) மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    ×