என் மலர்
நீங்கள் தேடியது "Kidnapping of schoolgirl"
- வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை.
- 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.






