என் மலர்

  நீங்கள் தேடியது "Keeway K-Light 250V"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கீவே இந்தியா நிறுவனம் புதிய குரூயிசர் மாடல் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
  • முன்னதாக கீவே நிறுவன ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

  கீவே நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த K லைட் 250V குரூயிசர் மாடல் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கீவே K லைட் 250V மேட் புளூ நிற வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 89 ஆயிரம் என்றும் மேட் டார்க் கிரே மற்றும் மேட் பிளாக் நிற வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


  முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு 300சிசி ஸ்கூட்டர்கள் கீவே - விஸ்டி 300 மற்றும் சிக்ஸ்டீஸ் 300i உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இரு ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் மற்ற நிற வேரியண்ட்களை தேர்வு செய்யும் போது விலை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை அதிகரிக்கும்.

  கீவே K லைட் 250V மாடலில் 249சிசி ஏர் கூல்டு V டுவின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.7 ஹெச்.பி. பவர், 19 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனிற்கு யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

  ×