என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthi 29"

    • நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    • 'ஹிட் 3' படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து நடிகர் கார்த்தி படம் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் கார்த்திக்கு 29 திரைப்படமாகும். அதனால், இப்படத்தை கார்த்தி 29 என்று அழைக்கப்படுகிறது.

    படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு குழு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதில் ஒரு கப்பல் கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

    இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே கார்த்தி நடிகர் நானியில் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எக்ஸ் தள பதிவில் கனவே என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றுடன் விரைவில்.. காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.

    இதனால், இது கார்த்தி 29 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • கார்த்தி அடுத்ததாக பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்ததுள்ளார்
    • டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து கார்த்தி 29 படம் நடிக்கவுள்ளார் .

    பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியிலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    இதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து படம் நடிக்கவுள்ளார் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளனர். இப்படம் கார்த்திக்கு 29 திரைப்படமாகும்.

    படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கப்பல் கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் 2025 ஆண்டு வெளியாகவுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கார்த்தி அடுத்ததாக பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்து வரும் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×