என் மலர்

  நீங்கள் தேடியது "Kartarpur Corridor"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து கர்தார்பூர் சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதை சீனா வரவேற்று உள்ளது. #KartarpurCorridor #ChinaWelcome #India #Pakistan
  பீஜிங்:

  சீக்கிய மதகுரு குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூரில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தேரா பாபா நானக் புனித தலம் வரையிலான 4.7 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்திய சீக்கியர்கள் கர்தார்பூருக்கு புனித யாத்திரை செல்வதற்கு வசதியாக அமைக்கப்படும் இந்த சாலையின் அந்தந்த நாட்டு பகுதிகளை அந்தந்த அரசுகள் அமைக்கின்றன.

  இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதை சீனா வரவேற்று உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு மந்திரி கெங் சுவாங் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த நல்ல தொடர்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெற்கு ஆசியாவின் முக்கியமான இந்த இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் நிலைத்தன்மை உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பை ஏற்படுத்தும்’ என்று பாராட்டினார். அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை, பிரச்சினைகளை சரியாக அணுகுதல் மற்றும் உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்த இரு நாடுகளாலும் முடியும் என உண்மையிலேயே நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.  KartarpurCorridor #ChinaWelcome #India #Pakistan 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார். #KartarpurSahibcorridor #Sikhtemple #ImranKhan
  இஸ்லாமாபாத்:

  சீக்கிய மதத்தவர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ் என்பவருக்கு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் மிக பிரமாண்டமான பொற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் குர்த்துவாரா என்றழைக்கப்படும் சீக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளன.

  அவ்வகையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டம், ஷக்கார்கர் அருகேயுள்ள கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

  பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்துவாராவுக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூர் இருந்து பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
   
  இதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்கும் சாலை பணிகளுக்கு  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 26-ம் தேதி  அடிக்கல் நாட்டினார்.

  இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, விஜய் சம்பாலா, பஞ்சாப் முதல் மந்திரி கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பாதையை அமைக்கும் பணிகளை இன்னும் 4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதேபோல், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் இந்த பாதையை இணைக்கும் சாலைக்கான பணிகளுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

  இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  #KartarpurSahibcorridor #Sikhtemple #ImranKhan 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானில் வரும் 28-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு மந்திரி விடுத்திருந்த அழைப்பை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நிராகரித்து விட்டார். #KartarpurCorridor #SushmaSwaraj #Pakistaninvite
  புதுடெல்லி:

  பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும்.

  பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இருந்து சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
   
  இதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை தனிவழி அமைக்குமாறு பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  இதைத் தொடர்ந்து, சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உரிய வசதிகளுடன் தனிவழியை ஏற்படுத்துமாறு வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது.  இதையேற்று, இந்த பாதைக்கான பணிகளின் தொடக்க விழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரைஷி அழைப்பு விடுத்திருந்தார்.

  தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள சில நிகழ்ச்சிகளை காரணம்காட்டி இந்த அழைப்பை சுஷ்மா நிராகரித்து விட்டார். அதே நாளில் (28-ம் தேதி) தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் பணி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக, பாகிஸ்தான் மந்திரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘எங்கள் நாட்டிலுள்ள சீக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் வசதியாகவும் விரைவாகவும் பாகிஸ்தானுக்கு சென்று குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப் ஆலயத்தை தரிசிக்க வழி வகிக்கும் இந்த பாதையின் தொடக்க விழாவுக்கு எங்கள் நாட்டின் சார்பில் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை அனுப்பி வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதேபோல், பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் அரசின் அழைப்பையேற்று அங்கு செல்ல அனுமதிகோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கடிதம் அளித்துள்ளார். #KartarpurCorridor #SushmaSwaraj #Pakistaninvite
  ×