search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kartarpur"

    பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் எனக் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் இறுதிக் காலத்தில் பாகிஸ்தானின் கர்தார்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தர்பார் சாகிப் குருத்வாரா, சீக்கியர்களின் புனித தலம் ஆகும்.

    கடந்த 18-ம் தேதி திறக்கப்பட்டுள்ள கர்தார்பூர் சாலை வழியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து  தர்பார் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற வேண்டும். நாம் எல்லைகளை திறக்க வேண்டும். பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் மேற்கொண்ட முயற்சியால்தான் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்டது. இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

    கர்தார்பூர் சென்ற  சித்து, தன்னை வரவேற்ற பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இம்ரான் கான் தனக்கு மிகவும் பிடித்தமான நபர். தனது மூத்த சகோதரர் போன்றவர் என கூறிய பதிவுகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சித்து மூத்த சகோதரர் என கூறியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் செல்ல வசதியாக சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    புதுடெல்லி:

    சீக்கிய மத குருக்களில் முதன்மையானவர் குருநானக். அவர், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்புரில் சமாதி அடைந்ததாக கருதப்படுகிறது. அங்கு கட்டப்பட்ட குருத்வாராவில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டு உள்ளது. சீக்கியர்கள் அங்கு புனிதப்பயணம் செல்வது வழக்கம்.

    ஆனால், அங்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. ஆகவே, புதிய சாலை அமைக்க பாகிஸ்தானை வற்புறுத்தும் வகையில், பஞ்சாபில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.



    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் மாவட்டம் தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:-

    இது, இந்தியா-பாகிஸ்தான் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவு. மத்திய அரசு நிதியில் இந்த சாலை அமைக்கப்படும். அதுபோல், சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்புர் குருத்வாராவரை சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தப்படும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் சீக்கியர்கள் அங்கு எளிதாக சென்று வர முடியும்.

    அடுத்த ஆண்டு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இது சீக்கியர்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வானிலை ஆய்வை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு தற்போது அமல்படுத்தி வரும் 9 துணை திட்டங்களை 2020-ம் ஆண்டுவரை தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

    மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை உட்பிரிவு செய்வது பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே 31-ந் தேதிவரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, இந்த ஆணையத்துக்கு 4-வது கால நீட்டிப்பு ஆகும்.  #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    ×