search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari lodge"

    கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் அறையில் விபசார தொழிலில் ஈடுபட்ட அழகி, புரோக்கர் மற்றும் லாட்ஜ் மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகளும் கன்னியாகுமரியில் ஊடுருவி சுற்றுலா பயணிகளிடம் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கன்னியாகுமரியல் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மாறு வேடங்களிலும் போலீசார் கண்காணிப்பு நடக்கிறது.

    அதேப்போல விபசார செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் தற்போது கன்னியாகுமரிக்கு பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவதால் விபசார கும்பல் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு விபசார புரோக்கர் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை அழகியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த லாட்ஜ் முன்பு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சத்யன் (வயது 52) என்ற விபசார புரோக்கர் நின்றுகொண்டு விபசாரத்திற்காக சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாட்ஜ் அறையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஒரு அறையில் அரை குறை ஆடையுடன் அழகி ஒருவர் இருந்ததும் தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் அந்த அழகி அதிர்ச்சி அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் அந்த லாட்ஜின் மானேஜரும் கைது செய்யப்பட்டார்.
    கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்தனர். இதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காதலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே ஒரு லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி காலை 7 மணி அளவில் இந்த லாட்ஜிக்கு இளம்பெண் ஒருவருடன் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தாங்கள் கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகவும், சில நாட்கள் இங்கு தங்கி இருக்க போவதால் தங்களுக்கு லாட்ஜ்யில் ரூம் வேண்டும் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு லாட்ஜ்யில் ரூம் ஒதுக்கப்பட்டது. அந்த ஜோடியிடம் இருந்து முகவரி சான்றாக ஆதார் அட்டையின் நகலும் வாங்கப்பட்டது.

    தினமும் காலையில் லாட்ஜ்யில் இருந்து புறப்படும் அந்த ஜோடி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவு மீண்டும் லாட்ஜிக்கு திரும்பி விடுவார்கள்.

    இந்த நிலையில் நேற்றும் காலையில் அவர்கள் இருவரும் வழக்கம் போல வெளியில் சென்று விட்டு இரவு தாங்கள் தங்கி இருந்த லாட்ஜிக்கு திரும்பினார்கள். இன்று காலையில் லாட்ஜ் ஊழியர்கள் அங்கு தங்கி இருப்பவர்களின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு தேவையா? என்பது பற்றி கேட்டனர்.

    இந்த ஜோடி தங்கி இருந்த அறை கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை. அதே சமயம் அறை உள்ளே இருந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டது.  இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்துச் சென்றனர். அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    அங்கு அந்த வாலிபர் கையில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடன் தங்கி இருந்த இளம்பெண் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.

    உடனடியாக அந்த வாலிபரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பெண்ணின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

    அந்த வாலிபர் பெயர் சதீஷ் (வயது27), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    அவருடன் தங்கி இருந்த பெண்ணின் பெயர் கார்த்திகா(24). கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்தூர். இவருக்கு திருமணமாகி விட்டது. சதீஷ் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலைக்குச் செல்லும் போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    இவர்களது கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கன்னியாகுமரிக்கு வந்தனர்.

    இங்கு பல இடங்களையும் சுற்றிப்பார்த்த அவர்கள் லாட்ஜியில் வைத்து வி‌ஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். இதில் கார்த்திகா இறந்து விட்டார்.

    சதீஷ்சுக்கு வாந்தி ஏற்பட்டதால் அவர் சாப்பிட்ட வி‌ஷ மாத்திரையில் இருந்து தப்பி விட்டார். ஆனாலும் கள்ளக்காதலி இறந்த பிறகு தான் உயிர் வாழக்கூடாது என்பதற்காக கத்தியால் கையை அறுத்து உள்ளார். அதற்குள் போலீஸ் வந்து அவரை காப்பாற்றி உள்ளனர். இது பற்றி சதீஷ் மற்றும் கார்திகாவின் பெற்றோர், உறவினர்களுக்கு கன்னியாகுமரி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×