search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanni Dheivam"

    • புடவையை வைத்து வழிபாடு செய்வதுதான் புடவைக்காரி வழிபாடு.
    • ஆடி மாதம்தான் மிகப் பெரிய திருவிழாவாகப் புடவைக்காரி வழிபாடு களை கட்டும்.

    ஒரு குடும்பத்தில் இளம் பெண் இறந்தாலோ, வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பெண்கள் இறந்தாலோ அந்தப் பெண்களைக் குல தெய்வமாக வழிபடுவது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் வழக்கத்தில் உள்ளது.

    இதற்கு கன்னி தெய்வ வழிபாடு என்று பெயர்.

    சில மாவட்டங்களில் குறிப்பாக கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் இதற்கு புடவைக்காரி வழிபாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த வழிபாட்டுக்காக கோவில் கூட கட்டுவார்கள்.

    மூலவர் சந்நிதியில் பொதுவாக சாமி சிலையை வைத்துப் பிரதிஷ்டை செய்வதற்குப் பதிலாகப்

    புடவையை வைத்து வழிபாடு செய்வதுதான் புடவைக்காரி வழிபாடு.

    குல தெய்வத்தை நினைத்துப் புடவை வைத்து சாமி கும்பிடும் குடும்பத்தினர் அந்தப் புடவையை

    ஒரு குடத்திலோ பேழைப் பெட்டியிலோ வைத்துக் கோவிலில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

    ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சாமி கும்பிடும் படலம் நடந்தாலும்,

    ஆடி மாதம்தான் மிகப் பெரிய திருவிழாவாகப் புடவைக்காரி வழிபாடு களை கட்டும்.

    பெண்கள், கன்னி தெய்வமாக மாறி, அந்த குடும்பத்தையே பாதுகாப்பதாக ஐதீகம்.

    எனவே ஆடி மாதம் பெண்கள் மறக்காமல், தவறாமல் இந்த கன்னி தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டுவார்கள்.

    ×