search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalyana vinayagar"

    • புனித நீர் எடுத்துச் சென்று காலை 11 மணிக்கு விமான அபிஷேகம் நடந்தது
    • வருஷாபிஷேக பூஜையை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பட்டர் ஹரிஷ் நடத்தினார்.

    உடன்குடி:

    உடன்குடி பண்டாரவிளைதெரு கல்யாண விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும், புனித நீர் எடுத்துச் சென்று காலை 11 மணிக்கு விமான அபிஷேகம், தொடர்ந்து கல்யாண விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பகல் 1 மணிக்கு புது விருந்து அன்னதானமும் நடந்தது. வருஷாபிஷேக பூஜையை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பட்டர் ஹரிஷ் நடத்தினார். இதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் நடராஜன், தொழிலதிபர் வாசுதேவன், உடன்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் ஷேக் முகமது, உடன்குடி நகர தி.மு.க. பொருளாளர் திரவியம், முன்னாள் கவுன்சிலர் சலீம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.

    ×