search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallipalayam temple festival"

    • கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.
    • இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 300ஆண்டுகள் பழமையான இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் கள்ளிப்பாளையம், வலையபாளையம், துத்தேரிபாளையம். உள்ளிட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் விழா நடத்த மேற்படி 3 கிராமத்தை சேர்ந்த மக்கள் தீர்மானித்தனர்.இந்த நிலையில் ஒரு தரப்பினர் எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இன்று (நேற்று) இருதரப்பினரும் குழு தேர்வு செய்து பட்டியல் வழங்குவதாக கூறிச் சென்றனர். இந்த நிலையில்,நேற்று பல்லடம் தாசில்தாரிடம் இரு தரப்பினரும் பட்டியல் வழங்கினர். இது குறித்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கூறியதாவது:-. இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர். இதனை சப்- கலெக்டருக்கு அனுப்பி வைத்து அவரது அறிவுறுத்தலின்படி விழா கமிட்டி தேர்வு செய்து, கோவில் விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்றார். இதற்கிடையே பல்லடம் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில், கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் தங்களை விழாக்குழுவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    ×