search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kali Saandi Temple"

    • நவராத்திரி நிறைவு விழாவையொட்டி மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
    • தொடர்ந்து வராகி அம்மனுக்கு மஞ்சள், பால், குங்குமம், சந்தனம் கும்பாபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் அமைந்துள்ள காளி சண்டி கோவிலில் வராகி அம்மன் சன்னதியில் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெற்று நிறைவு விழா நடைபெற்றது.

    இதனையொட்டி மாலை 5 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து வராகி அம்மன் உற்சவ சிலை அலங்கரிக்கப்பட்டு பால்குடம், அக்னி சட்டி எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மந்தித்தோப்பு வழியாக சென்று கோவில் வளாகத்தை அடைந்து,பின் மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து வராகி அம்மனுக்கு மஞ்சள், பால், குங்குமம், சந்தனம் கும்பாபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணி அய்யர் மற்றும் கோவில் பூசாரி முத்துமணி சங்கர் ஆகியோர் செய்தனர். இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜோதிடர் சுப்பிரமணியன் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×