என் மலர்
நீங்கள் தேடியது "Kalakaadu"
- களக்காடு தெற்கு வட்டாரத்தில் உள்ள கோவில ம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோப்பூரில் பகுதி நேர ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
- முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, அரசு அதிகாரிகள், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ராஜன், களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு தெற்கு வட்டாரத்தில் உள்ள கோவில ம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோப்பூரில் பகுதி நேர ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், கக்கன், அரசு அதிகாரிகள், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ராஜன், மாநில செயற் குழு உறுப்பினர் சித்திக், மழையடிபுதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், மற்றும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கமலா, களக்காடு நகராட்சி தலைவர் ஜார்ஜ் வில்சன், தெற்கு, மத்திய வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அலெக்ஸ், காளபெருமாள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வசந்தா, கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவி லதா முத்துராமலிங்கம், களக்காடு ஒன்றிய கவுன்சிலர் வனிதா காமராஜ், மற்றும் காங்கிரஸ் மகளிரணி நிர்வாகிகள் வேலம்மாள், விமலா, பாலம்மாள், லெட்சுமி, ஸ்ரீதேவி, களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.






