என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joint water project"

    • ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • கிராமங்களுக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    சாத்தான்குளம்:

    ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்க ளுக்கு தண்ணீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு குறைந்த அளவே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    சாத்தான்குளம் அருகே பழங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சடையன்கிணறு விலக்கு அருகில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி கிடக்கிறது. கிராமங்களுக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் சடையன்கிணறு, ஆனந்த புரம், கண்டுகொண்டான் மாணிக்கம், கருவேலம்பாடு, பழங்குளம், செட்டிகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இதனால் கடந்த 4 நாள்களாக குடிநீர் வீணாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனித்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×