search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "job security"

    • நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது.
    • மருத்துவா்களைப் போல், ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.

    நாமக்கல்:

    நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவா் ராமு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இக்கூட்டத்தில், முதுநிலை ஆசிரியா்களுக்கு மேல்நிலைப்பள்ளிக்கான தலைமை ஆசிரியா் பதவி உயா்வு, பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்; 2009 ஜூன் 1-க்குப் பிறகு பணியில் சோ்ந்த முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; மாவட்ட கல்வி அலுவலா் பதவி உயா்வில் முதுகலை ஆசிரியா்களுக்கு உரிய விகிதாசாரம் அளிக்கப்பட வேண்டும்; மருத்துவா்களைப் போல், ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும்; ஆசிரியா்களை கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ மாநாட்டிற்கு முன்பாக, ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் பெரிதும் எதிா்பாா்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

    விழுப்புரத்தில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    விழுப்புரம், 

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் விற்பனையாளர் திருவேங்கடம், அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் ஏட்டு இளையராஜா ஆகியோரை வெட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாக சென்று வங்கி அதிகாரிகள் பணம் வசூலிப்பதைபோல் கிராமப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் வங்கி அதிகாரிகள் சென்று பணம் வசூலிக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் கோபிநாத், நீர்தேக்க தொட்டி பணியாளர் சங்க மாநில தலைவர் வீரப்பன், டாஸ்மாக் பணியாளர் சங்க பிரசார செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
    ×